பாடசாலை பாட திட்டத்தில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றம்!

தரம் 6 தொடக்கம் 8 வரையான மாணவர்களின் குடியுரிமை பாடத்தில், சட்டக் கல்வி தொடர்பான பாடப்பகுதியை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் கல்வி மறுசீரமைப்பு மேற்கொள்ளும் போது, சாதாரண தரத்திலும் இந்த பாடப்பகுதியை தெரிவுப் பாடமாக இணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி 6ஆம் தரத்தில், குடியுரிமை பாடத்தில் சட்டக் கல்வி மூன்றாம் தவணை மாதிரியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஒழுக்கமான சமுதாயமாக உருவாக்குவதற்கு சட்டம் தொடர்பாக மாணவர்கள் அறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply