யாழ்ப்பாணம் பூநகரி, சங்குபிட்டி பாலத்தில் நேற்றையதினம் (12) பெண்ணின் சடலம் ஒன்று கரையொதுங்கியிருந்தது.
18 முதல் 22 வயதிற்குட்பட்ட பெண்ணின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியிருந்தது.
மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த பெண்ணின் முகம் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மிதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த பெண் பலரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்படுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சங்குபிட்டி பாலத்தில் நேற்றையதினம்(12) பெண்ணின் சடலம் ஒன்று கரையொதுங்கியிருந்ததை அடுத்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் கிளிநொச்சி நீதிமன்ற பதில் நீதவான் எஸ். சிவபாலசுப்பிரமணியம் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு சடலத்தை மீட்க உத்தரவிட்டார்.
மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எனினும் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பிலான தகவல் எதுவும் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
