மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி- பங்களாதேஷை வெற்றி கொண்டது தென் ஆபிரிக்கா அணி!

ஐ.சி.சி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி- பலத்த சவாலுக்கு மத்தியில் பங்களாதேஷை வெற்றி கொண்டது தென்னாபிரிக்க அணி!

ஐ.சி.சி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நேற்றையதினம் விசாகப்பட்டினம் மாவட்ட கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் நடைபெற்றது.

பங்களாதேஷ் மற்றும் தென் ஆபிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்காளதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 232 ஓட்டங்களைப் பெற்றது.

பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 233 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 49.3 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 235 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

பங்களாதேஷிடம் பலத்த சவாலை எதிர்கொண்ட தென் ஆபிரிக்கா 3 பந்துகள் மீதம் இருக்க 3 விக்கெட்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

ஐ.சி.சி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 13ஆவது அத்தியாயத்தில் கிட்டத்தட்ட அரைவாசி போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவுஸ்திரேலிய அணி 7 புள்ளிகளுடன் முதலாம் இடத்திலும், இங்கிலாந்து மற்றும் தென் ஆபிரிக்க அணிகள் தலா 6 புள்ளிகளுடன் முறையே 2ஆம், 3ஆம் இடங்களிலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply