இலங்கை வருகை தரும் அனைத்து வெளிநாட்டினருக்கும் நாளை முதல் கட்டாயமாகும் நடைமுறை!

இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும், நாட்டிற்குள் நுழைவதற்கு முன் மின்னணு பயண அங்கீகாரத்தை (Electronic Travel Authorization – ETA) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை (15) முதல் மின்னணு பயண அங்கீகார அனுமதியைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இலவச சுற்றுலா விசாவிற்கு தகுதி பெறும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும், இலங்கை வந்தவுடன் இந்த அனுமதியைப் பெற வேண்டும்.

இதற்கிடையில் அமெரிக்கா இலங்கைக்கான தனது பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த பயண ஆலோசனையை இரண்டாம் கட்டத்தின் கீழ் புதுப்பித்துள்ளது.

மேலும் பல ஆபத்து குறிகாட்டிகளைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அமைதியின்மை, பயங்கரவாதம் மற்றும் கண்ணிவெடிகள் குறித்து பயணிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்கா ஒரு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply