ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவாழ் கடந்த வெள்ளிக்கிழமையன்று அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, அடுத்து எந்நேரமும் மாகாண ஆளுநர்களில் மாற்றங்களைச் செய்யக்கூடும் என அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு மாகாணத்தினதும் ஆளுநர்களின் செயற்பாடுகள், பெறுபேறுகள், நடவடிக்கை முன்னேற்றங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் மதிப்பீடுகளைத் தயாரித்து வருவதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
அதன் அடிப்படையில் ஜனாதிபதியின் முடிவுகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழர்களின் ஈடுபாடு உள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை ஜனாதிபதி செயலகம் ஓரளவு திருப்தி கொண்டிருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தாமல், நிர்வாக நடவடிக்கைகளை வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்னெடுத்துச் செல்வதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்களில் அறிய முடிகிறது.
எனினும் செயல்பாடுகளில் திருப்தி இல்லாத சில மாகாண ஆளுநர்கள் குறித்து ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அறிய முடிகிறது.
