இஷாரா செவ்வந்தியை நாட்டுக்கு அழைத்துவர நேபாளம் சென்ற விசேட அதிரடிப் படையின் அதிகாரிகள்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உடந்தையாக இருந்த இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர் நேபாளத்தில் நேற்று முன்தினம் (13) கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவர் கெஹல்பத்தர பத்மேவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​இஷார செவ்வந்தியின் மறைவிடத்தை பொலிஸாரால் அடையாளம் காண முடிந்தது. அதன்படி ரோஹன் ஒலுகல தலைமையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இஷாரா நேற்று முன்தினம் இரவு நேபாளத்தின் பக்தபூர் மாவட்டத்தில் உள்ள திப்போஸ் பூங்கா பகுதியில் உள்ள ஒரு ஆடம்பரமான வீட்டில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டார்.

இவருடன் பாதாள உலக உறுப்பினர்கள் உட்பட ஐந்து பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதானவர்களில் கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி ஒருவரும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்ட பின்னர் பொலிஸ் அதிகாரிகள் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற நிலையில், வேறொரு நாட்டின் பிரஜையாக அவரது முகத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு கடவுச்சீட்டு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இஷாரா செவ்வந்தி, வெளிநாட்டு கடவுச்சீட்டை பயன்படுத்தி ஒரு ஐரோப்பிய நாட்டிற்கு தப்பிச் செல்லத் தயாராகி வந்துள்ளார்.

இந்தநிலையில் கைதான இஷாரா செவ்வந்தி, தான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்பதை அறிந்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

பேலியகொட குற்றப்பிரிவின் இயக்குநர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகல, தன்னை எந்த நேரத்திலும் கைது செய்வார் என அறிந்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

7 மாதங்கள் நேபாளத்தில் தலைமறைவாகி இருந்த போது வெறுப்பு நிலைமை ஏற்பட்டது. இலங்கை செல்லலாம் என எண்ணிய போதும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் நேபாளத்தில் பதுங்கியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களையும் நாட்டிற்கு அழைத்து வருவதற்காக விசேட அதிரடிப் படையின் இரண்டு அதிகாரிகள் நேபாளம் புறப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே நேபாளத்தில் உள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) குழுவிற்கு துணையாக இவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களை அழைத்துக் கொண்டு அவர்கள் இன்று (15) மாலை நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply