முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று (15) கைது செய்யப்பட்டுள்ளார்.
மனுஷ நாணயக்கார கடந்த அரசாங்கத்தின் போது அமைச்சராக செயல்பட்ட காலத்தில், விவசாய வேலைகளுக்காக இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவதில் நடந்த முறைகேடுகள் குறித்து இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை நடாத்தி வந்தது.
இது தொடர்பிலான விசாரணைக்காக வாக்குமூலம் அளிக்க மனுஷ நாணயக்கார இன்றையதினம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகி இருந்தார்.
இந்தநிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாம் கைது செய்யப்படுவதற்கு முன்னர் முன்பிணையில் விடுவிக்குமாறு மனுஷ நாணயக்கார சமர்ப்பித்த கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
