ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தை நாடாதும் பொருட்டு மூன்று பேர் கொண்ட குழுவை நியமிக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
குறித்த குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரள, ஜனாதிபதி சட்டத்தரணி ரெனோல்ட் பெரேரா ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் பல கட்சி முறையிலான ஜனநாயகத்தை பாதுகாக்க அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவருவது ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
