தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட மணிக்கூட்டுக்கோபுரம் இன்று (16) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆறு திருமுருகன் மணிக்கூட்டுக்கோபுரத்தை திறந்து வைத்துள்ளார்.
குறித்த மணிக்கூட்டுக் கோபுரம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பழைய மாணவன் தணிகாசலம் விஜயகுமாரின் நிதிப்பங்களிப்புடன் அவரது தந்தை கந்தையா தணிகாசலம் ஞாபகார்த்தமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
