நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கத்தின் விலை!

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று (17) 4 லட்சத்தை கடந்துள்ளது.

அதன்படி 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 4,10,000 அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினத்துடன் (16) ஒப்பிடும் போது இதன் விலை இன்று 15 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது.

அதேநேரம் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் (17) 13 ஆயிரத்து 800 ரூபாய் அதிகரித்து 3,79200 ரூபாயாக காணப்படுகிறது.

நேற்றைய தினம் (16) 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 3,95000, 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 3,65400 ரூபாயாகவும் காணப்பட்டது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply