பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்றையதினம் 12:00 மணி முதல், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், தங்களது திட்டமிடப்பட்ட விமான புறப்படும் நேரத்திற்கு நான்கு மணிநேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்திற்குள் நுழைந்து பதிவு செய்ய வேண்டும் என விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நடைமுறை பயணிகள் சேவைகளை மேம்படுத்துவதற்கும், விமான நிலையத்தினுள் பயணிகள் போக்குவரத்தைச் சீராகச் செய்வதற்கும் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையின் முக்கிய சர்வதேச நுழைவாயிலில் கூட்ட நெரிசலை நிர்வகிக்கவும், நெரிசலைக் குறைக்கவும், ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும் இந்த முயற்சி உதவும் என எதிர்பார்க்கப்படுவதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) லிமிடெட் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply