பேருந்தில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சாரதி கைது!

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேருந்து சாரதியும் அவருடன் பயணித்த மற்றொரு நபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை காவல்துறையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன், பேருந்தும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த பேருந்தில் இவ்வாறு சிறிது காலமாக போதைப்பொருள் கடத்தி வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கைதான இரண்டு சந்தேக நபர்களும் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply