தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட பேருந்து சேவை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட பேருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஹட்டன், வெலிமட, பதுளை, பசறை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்கு அதிக பயணிகள் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், வீதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்ட பேருந்துகளை அதிகபட்சமாக சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதேநேரம் மேல் மாகாண போக்குவரத்து ஆணைக்குழுவினால் அனுமதி பெற்றுள்ள பேருந்துகளையும் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய இந்த விடுமுறையில் சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தப் பேருந்துகளுக்கான தற்காலிக அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடவடிக்கைகள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பெஸ்டியன் மாவத்தை அலுவலகத்தால் மேற்கொள்ளப்படும், இதற்காக சாதாரண நாட்களில் பணியில் இருக்கும் அதிகாரிகளை விட அதிகமான அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் காலகட்டத்திற்குப் பின்னர் கொழும்புக்குத் திரும்பும் பயணிகளுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக, பயணிகள் தேவை அதிகமாக உள்ள பகுதிகளில் தற்காலிக அனுமதிப்பத்திரங்களின் கீழ் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துமாறு மாகாண போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஏற்கனவே தேவையான தற்காலிக அனுமதிப்பத்திரங்களை மாகாண போக்குவரத்து அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply