தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ் பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ் பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று (21) மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அனைத்துத் தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சம்பந்தப்பட்ட மாகாண ஆளுநர்கள் அறிவித்துள்ளனர்.

எனினும் இன்றைய (செவ்வாய்க்கிழமை) விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் சனிக்கிழமை (25) பாடசாலைகளை நடத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வட மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகள் இன்றைய தினம் வழமைப்போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply