யாழ். நகரை மையமாக கொண்ட பொலிஸாரின் விசேட சேவை ஆரம்பம்!

யாழ். நகரை மையமாக கொண்ட பொலிஸாரின் விசேட சேவையொன்று இன்றைய தினம் (21) முதல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

வீதி போக்குவரத்து பிரச்சினைகள், சிறு குற்றங்கள் என்பவற்றை தவிர்க்கும் வகையில் இந்த விசேட சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விசேட சேவை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில், யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமஹா தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் சேவையை பெற்றுக்கொள்ள 021- 222 2221 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு பொதுமக்கள் முறையிடுவதன் மூலம் பொலிஸார் குறித்த பகுதிக்கு விரைந்து சென்று, பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள எந்த பகுதியில் இருந்தும் இந்த இலக்கத்திற்கு அழைப்பெடுத்து முறையிட்டால் அந்தந்த பகுதி பொலிஸ் நிலையங்களின் ஊடாக பொது இடங்கள் மற்றும் போக்குவரத்துக்களின்போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக உடனடி தீர்வினைப் பெற முடியும் எனவும் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply