பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியை எதிர்வரும் 31ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
அவர் மீதான வழக்கு இன்று (23) விசாரணைக்கு எடுத்துக்கொப்ப போது, அவரை எதிர்வரும் 31ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் சந்தேக நபரின் பிணை மனு தொடர்பான உத்தரவும் அன்றைய தினம் அறிவிக்கப்படும் என கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம அறிவித்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
