தியபெதும மற்றும் கப்புகொல்லேவ பகுதிகளில் புதையல் தேடும் நோக்கத்தில் அகழ்வில் ஈடுபட்ட பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (26) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
பொலன்னறுவை குற்றத் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலன்னறுவை மாவட்டத்தின் தியபெதும பொலிஸ் பிரிவின் நுவரகேயாய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இதன்போது புதையல் தேடும் நோக்கில் அகழ்வில் ஈடுபட்ட மூவருடன், அகழ்விற்கு பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் பூஜை பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றினர்.
புத்தளம் மற்றும் அத்தனகடவல பகுதிகளில் வசிக்கும் 20-43 வயதுடைய நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தியபெதும பொலிஸார் முன்னெடுத்த்து வருகின்றனர்.
இதற்கிடையில் நேற்று (26) பிற்பகல் ஹொரொவ்பொத்தானை, கப்புகொல்லேவ பொலிஸ் பிரிவின் துட்டுவெவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது புதையல் தேடும் நோக்கில் அகழ்வில் ஈடுபட்ட ஒரு சந்தேக நபர் ஒருவர் அகழ்வு பொருட்களுடன் கைது செய்யப்பட்டார்.
கப்புகொல்லேவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.
துட்டுவெவ, கப்புகொல்லேவ பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கப்புகொல்லேவ பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்க்கது.
