வெல்லவாய பகுதியில் விபத்து- பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!

வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெல்லவாய பொலிஸ் பிரிவின் வெல்லவாய-தனமல்வில வீதியில் ஆதாவெலயாய பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தனமல்வில திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கிச் சென்ற இராணுவப் பேருந்தும் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிள் செலுத்துனர் படுகாயமடைந்திருந்த நிலையில், வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் வெல்லவாய, ராஜமாவத்தையைச் சேர்ந்த 36 வயதான பொலிஸ் சார்ஜென்ட் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் வெல்லவாய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply