ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி கைது- யாழில் சம்பவம்!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை இன்று அதிகாலை (27) இடம்பெற்றுள்ளது.

யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில், சுன்னாகம் பொலிஸ் நிலைய பாரிய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியின் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 2 ஆயிரத்து 400 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply