இராணுவப் பயிற்சியின் போது வெடித்து சிதறிய கைக்குண்டு- மூவர் வைத்தியசாலையில்!

மாதுரு ஓயா இராணுவப் பயிற்சி முகாமில் இடம்பெற்ற இராணுவப் பயிற்சியின் போது கைக்குண்டு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மூன்று இராணுவ வீரர்களின் கால்களில் காயம் ஏற்பட்ட நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை இராணுவத்திற்கும் ரஷ்ய இராணுவத்திற்கும் இடையில் இந்த நாட்களில் நடைபெறும் இராணுவப் பயிற்சியின் போது இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகின்றது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply