ஹெரோயின் போதைப்பொருளுடன் அரச பேருந்து சாரதி கைது!

நல்லதண்ணி பகுதியில் அரச பேருந்து சாரதி ஒருவர் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வட்டவளை பகுதியை சேர்ந்த, ஹட்டன் அரச பேருந்து நிலையத்தின் சாரதியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நல்லதண்ணி பகுதியில் உள்ள பேருந்து நிலைய தங்குமிட விடுதியில் வைத்து குறித்த சாரதி நேற்று (30) இரவு கைது செய்யப்பட்டார்.

நல்லதண்ணி பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவல்களைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக சந்தேக நபரை கண்காணித்து வந்த வேளையில் நேற்று இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 2 போதை வில்லைகள் மற்றும் 77 மில்லி கிரேம் ஹெரோயின் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதான சந்தேகநபர் இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply