நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க பொலிஸ் மாஅதிபர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகே தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (31) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவும் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் பாதுகாப்பு கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க பொலிஸ் மாஅதிபருடன், சபாநாயகரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
