பொலிதீன் பைகளை இலவசமாக விநியோகிப்பது நாளை முதல் தடை!

பொருள் கொள்வனவுகளின் போது பொலிதீன் பைகளை இலவசமாக விநியோகிப்பது நாளை (நவம்பர் 1) முதல் தடைசெய்யப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

ஒக்டோபர் 01ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில், நுகர்வோருக்கு வழங்கப்படும் பட்டியலில், விற்பனையாளர்கள் பொலிதீன் பைகளின் விலையைக் குறிப்பிடுவதை நுகர்வோர் விவகார அதிகார சபை கட்டாயப்படுத்தியுள்ளது.

அதன்படி குறைந்த அடர்த்தி பொலிதீன் (LLDPE) மற்றும் நேரியல் குறைந்த அடர்த்தி பொலிதீன் (LDPE) ஆகியவற்றால் செய்யப்பட்ட பைகளை இலவசமாக வழங்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த பைகளின் விலையை வர்த்தக நிலையங்களில் தெளிவாகக் காட்சிப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே நாளை முதல் பொலித்தீன் பைகளுக்கு கட்டாயம் பணம் அறவிடப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply