பொலிதீன் பைகளை இலவசமாக விநியோகிப்பது இன்று முதல் தடை!

பொருள் கொள்வனவுகளின் போது பொலிதீன் பைகளுக்கு, வர்த்தக நிலையங்கள் கட்டணம் அறவிட வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தல் இன்று (நவம்பர் 1) முதல் நடைமுறைக்கு வருகிறது.

அதன்படி விற்பனையாளர்கள், நுகர்வோருக்கு வழங்கப்படும் பட்டியலில் பொலிதீன் பைகளின் விலையைக் குறிப்பிடுவதை நுகர்வோர் விவகார அதிகார சபை கட்டாயப்படுத்தியுள்ளது.

பொலிதீன் பயன்பாட்டினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்குடன், பொலிதீன் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது சம்பந்தமாக வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் கருத்து தெரிவிக்கையில்,

இனிமேல் வர்த்தக நிலையங்களில் பொலிதீன் பைகள் இலவசமாக வழங்கப்படாது எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாவனையாளர்களுக்கு வர்த்தக நிலையங்களால் வழங்கப்படும் கைப்பிடி கொண்ட ‘சிலி சிலி’ பைகளுக்காக ஒரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு நவம்பர் 01ஆம் திகதி முதல் ‘சிலி சிலி’ பைகளை இலவசமாக வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வர்த்தக நிலையங்களால் பொலிதீன் பைகள் இலவசமாக வழங்கப்பட மாட்டாது.

சூழலைப் பாதுகாப்பதற்குப் பங்களிப்பது பாவனையாளரின் கடமையாகும். ஒரு கடைக்கு பொருட்களை வாங்கச் செல்லும் போது, அதற்கு பொருத்தமான பையை வீட்டிலிருந்து எடுத்துச் செல்லுங்கள்- என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply