இலங்கை வருகை தரவுள்ள வத்திக்கான் வெளியுறவு அமைச்சர்!

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர் (Paul Richard Gallagher) நாளைமறுதினம் (3) இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தின் அழைப்பின் பேரிலேயே பால் ரிச்சர்ட் கல்லாகர் இலங்கை வருகை தரவுள்ளார்.

நவம்பர் 3ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கும், வத்திக்கானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 50ஆவது ஆண்டு நிறைவையொட்டியே இந்த பயணம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவரது இந்த பயணத்தின் மூலம் இலங்கை மற்றும் வத்திக்கான் இடையிலான உறவு வலுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply