ஐசிசி மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டி நேற்றையதினம் (02) நவி மும்பை டி வை பட்டில் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்கா மற்றும் இந்திய அணிகள் பலபரீட்சை நடத்தின.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென்னாபிரிக்க மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்து.
அதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 298 ஓட்டங்களை பெற்றது.
இதன்படி 299 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க மகளிர் அணி 45.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 246 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் Shafali Verma அதிகபட்சமாக 87 ஓட்டங்களையும், Deepti Sharma 58 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் Ayabonga Khaka 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
தென்னாபிரிக்க மகளிர் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணியின் தலைவி laura wolvaardt அதிகட்பசமாக 101 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Deepti Sharma 05 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
அதன்படி 025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 52 ஓட்டங்களால் வெற்றிபெற்று முதல் முறையாக செம்பியன் பட்டம் வென்றுள்ளது.
ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகிய அணிகளைத் தொடர்ந்து இம் முறை புதிய அணியாக இந்தியா உலக சம்பியன் ஆனமை குறிப்பிடத்தக்கது.
