ஹல்துமுல்ல அக்கரசிய வனப்பகுதிக்குள் பயிரிடப்பட்டிருந்த 6 கஞ்சா சேனைகள் சுற்றிவளைக்கப்பட்டு, அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹம்பேகமுவ மற்றும் கல்தொட்ட பிரதேசங்களைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹல்துமுல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுற்றிவளைக்கப்பட்ட 6 கஞ்சா சேனைகளில் 85,000 இற்கும் அதிகமான பெரிய கஞ்சா செடிகள் மற்றும் 4 சிறிய நாற்றங்கால்கள் இருந்ததாகவும், அவை அனைத்தும் தீயிட்டு அழிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான சந்தேக நபர்கள் இன்று (03) பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
