ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகள் இருவர் கைது!

இலங்கையில் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், இலங்கை புகையிரத திணைக்களத்தின் முன்னாள் பொது முகாமையாளர் ஒருவரும், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளர் ஒருவரும் இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை புகையிரத திணைக்களத்தின் முன்னாள் பொது முகாமையாளர் சுமதிபால மஹானாம அபேவிக்ரம இன்று காலை 9.15 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

மற்றும் இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளர் சரத் சந்திர குணரத்ன ஜயதிலக்கவும் இன்று காலை 10.15 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply