2026 புதிய பாடதிட்டம்- பாடசாலை நேரத்தில் ஏற்பட்ட மாற்றத்துக்கு எதிர்ப்பு!

2026ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் புதிய பாடதிட்டத்துக்கு அமைவாக பாடசாலை நேரம் அரை மணிநேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை ரத்து செய்ய, அரசாங்கத்திற்கு எதிர்வரும் 7ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குவதாக ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணி அறிவித்துள்ளது.

குறித்த தீர்மானம் தொடர்பில் மாற்றம் செய்யப்படாவிட்டால் டிசம்பர் முதல் வாரத்தில் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply