அம்பலாங்கொடை நகர சபையின் பிரதான நூலகத்திற்கு முன்பாக துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று இன்று (04) காலை பதிவாகியிருந்தது.
கார் ஒன்றில் பிரவேசித்த சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் சந்தேகநபர்கள் தப்பிச்சென்ற கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கரந்தெனிய-எகொடவெல சந்தியில் கைவிடப்பட்ட நிலையில் குறித்த கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர்கள், சம்பவத்தின் பின்னர் பெங்வல-எகொடவெல வழியாக பயணித்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அம்பலாங்கொடை நகர சபையின் பிரதான நூலகத்திற்கு முன்பாக நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது ஒருவர் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் மோதர தேவாலய குழுவின் தலைவரான 56 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 4 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
