பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய கல்மேகி சூறாவளி- 58இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட கல்மேகி என்ற சூறாவளி காரணமாக 58இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

பெய்த கனமழையுடன் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்ததுடன், பல கார்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

அத்துடன் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

சூறாவளி காரணமாக 180க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வெள்ள மீட்புப் பணிக்காக சென்ற வானூர்தி ஒன்று மோசமான வானிலையால் விழுந்து நொறுங்கியமை பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இந்த சூறாவளி நாளை இரவு வியட்நாமின் மத்தியப் பகுதிகளில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வியட்நாம் அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply