துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது!

முல்லேரியா, பாரோன் ஜயதிலக்க மாவத்தையில் துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேபட பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைதான சந்தேகநபரிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்றும், 9 தோட்டாக்களும், சுமார் 13 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply