மஹரகமப் பகுதியில் பெண் உட்பட நான்கு பேர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களனி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைதான நபர்களிடம் இருந்து 1.5 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 680 கிராம் ‘ஐஸ்’ (ICE) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
எந்தேரமுல்ல பகுதியில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, இந்த சந்தேக நபர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியிருந்தன.
