2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு, அதாவது வரவு செலவுத் திட்ட உரை நாளை (07) நடைபெறவுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாளை மாலை ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பைச் சமர்ப்பிக்க உள்ளார்.
இந்தநிலையில் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (05) இரவு ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பார்வையிட்டார்.
இந்த சந்தர்ப்பத்தில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும அவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
