2026ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (08) முதல் ஆரம்பமாகிறது.
சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையில் இன்று (08) முற்பகல் 9:30 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (08) முதல் ஆரம்பமாகிறது.
இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகள்,
மு.ப. 09.30 – மு.ப. 10.00 நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்கள்.
மு.ப. 10.00 – மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்.
மு.ப. 10.30 – மு.ப. 11.00 நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.
மு.ப. 11.00 – பி.ப. 6.00 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2026 – இரண்டாம் மதிப்பீடு (ஒதுக்கப்பட்ட முதலாவது நாள்).
பி.ப. 6.00 – பி.ப. 6.30 சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி).
