தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியனின் தந்தையார் இராஜபுத்திரன் இராசாமாணிக்கம், தனது 67ஆவது வயதில் நேற்று காலமானார்.
அன்னாரின் திருவுடல் இன்றையதினம் (08) பிற்பகல் 2.00 மணியளவில் பொரளை Jayaratne Respect Home-இல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் நாளையதினம் (09) மாலை 6.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் எரியூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் அவர்கள், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியனின் தந்தையாரும், மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான சி. மூ. இராசமாணிக்கம் அவர்களின் புதல்வரும் ஆவார்.
