DNA கட்டமைப்பைக் கண்டறிவதில் முன்னோடியாகத் திகழ்ந்த ஜேம்ஸ் வொட்சன் காலமானார்!

DNA கட்டமைப்பைக் கண்டறிவதில் முன்னோடியாகத் திகழ்ந்த அமெரிக்க விஞ்ஞானியும் நோபல் பரிசு பெற்றவருமான ஜேம்ஸ் வொட்சன் (James Watson) தனது 97ஆவது வயதில் காலமானார்.

ஜேம்ஸ் வொட்சன், 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் DNA இன் இரட்டைச் சுருள் வடிவத்தை பிரிட்டிஷ் விஞ்ஞானி பிரான்சிஸ் கிரிக் உடன் இணைந்து 1953ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார்.

அவர்கள் இருவரதும் இந்தக் கண்டுபிடிப்பு மூலக்கூறு உயிரியலின் அதிவேக வளர்ச்சிக்கு ஒரு முக்கிய அடித்தளமாக அமைந்தது.

இதன் காரணமாக ஜேம்ஸ் வொட்சன் மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகிய இருவருக்கும் 1962ஆம் ஆண்டில் நோபல் பரிசு கிடைக்கப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply