2026ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்க நேற்றையதினம் (07) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றி வந்தார்.
இந்தநிலையில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தூங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தந்து முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளது.
அந்த பதிவில்,
இந்த தடவை வடக்கு மாகாணத்துக்கு பிச்சை இல்லை!
ஜனாதிபதி அவர்களின் பேச்சு புத்தகமாக தரப்பட்டிருக்கிறது.
அதை சேவ் (Surf) பண்ணுவது என்று சொல்வார்கள்.
மேலோட்டமாக ஓடிப் பார்த்தேன்!
வடக்கு மாகாணத்துக்குரிய எந்த சிறப்பு நிதியும் எங்கேயும் இல்லை!
வடக்கு மாகாணத்துக்கு எந்த நிதியும் இந்த முறை பாதீடில் குறிப்பிட்ட அளவாக ஒதுக்கப்படவில்லை!
போன முறை 5000 மில்லியன் பாதை, 1500 மில்லியன் பட்டு வாகல் பாலம் என்றெல்லாம் ஏமாற்றப்பட்டோம். நூலகத்துக்கு 200 மில்லியன் என்றார்கள்.
இங்க இந்தத் தடவை எதுவுமே இல்லை!
போன தடவை பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்ட 9.3 மில்லியன் கூட பாவிக்கவில்லை.
வடக்குக்காக ஒதுக்கப்பட்ட 5000 மில்லியன் பாவிக்கப்படவுமில்லை. திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
திருப்பி கிடைக்கப் போவதுமில்லை!
நித்திரை கொல்லாமல் வேறு என்ன செய்வது?
ஒரு பாயும் தலவாணியும் இருந்தால் நீட்டி நிமிர்ந்து படுத்திருப்பேன்!
பெரிய ஆசையுடன் பாராளுமன்றத்திற்கு காலையிலேயே வந்திருந்தேன்!
எல்லாம் புஸ்வாணம்.
மிகப்பெரிய ஏமாற்றம்..
இடையில் எழும்பி போனால் சரியில்லை தானே..
என பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
