கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி சூடு- உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான தகவல்!

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (07) இரவு துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது

கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தின் 16 ஆவது ஒழுங்கையில் நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கார் ஒன்றில் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 43 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் குற்றவியல் குழு உறுப்பினர் பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்ற ‘பூகுடு கண்ணா’ என்பவரின் சகா என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply