நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட கணவன், மனைவி கைது!

திவுலப்பிட்டிய பிரதேசத்தில் நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திவுலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திவுலப்பிட்டிய, மரதகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான நபர்களில் ஆணிடம் இருந்து 11 கிராம் மற்றும் 980 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், பெண்ணிடம் இருந்து 5,100 மில்லிகிராம் ஐஸ் (Ice) போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, கைதான கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் நீண்ட காலமாக திவுலப்பிட்டிய, கட்டுவெல்லேகம, துனகஹ, அலுதேபொல, மரதகஹமுல்ல, நெல்லிகஹமுல்ல, நில்பனாகொட, மினுவாங்கொட ஆகிய பிரதேசங்களுக்குப் போதைப்பொருட்களை விநியோகித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஆண் இன்று (08) மினுவாங்கொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவின் பேரில் விசாரிக்கப்படவுள்ளார்.

மற்றும் பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply