மினுவாங்கடை, அளுதெபொல பிரதேசத்தில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
மினுவன்கொட அதுலுபொல பொது விளையாட்டரங்கில் நேற்று (09) மாலை இடம்பெற்ற கிரிக்கட் போட்டியின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
போட்டியின் போது ஆட்டமிழப்பு ஒன்றுக்காக இரண்டு வீரர்கள் பந்தை பிடிக்க முயன்ற வேளை ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டதில் ஒருவர் காயமடைந்தார்.
காயமடைந்த நபர் மினுவாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பளுகஹாவெல கெட்டுவெல்கம பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய இஹலகே தனுஷ்க தேவிந்த பெரேரா என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
