மேல் மாகாணத்தில் பதிவாகும் திருட்டு சம்பவங்கள்!

கொழும்பு நகரம் உட்பட மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கடந்த 8 மற்றும் 9ஆம் திகதிகளில் மாத்திரம் மேல் மாகாணத்தில் வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 மோட்டார் சைக்கிள்களும் 3 முச்சக்கர வண்டிகளும் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட விசாரணைக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply