யாழில் உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி!

வட மாகாணத்தில் விளையாட்டுக்களை ஊக்குவிப்பதற்காகவும், விளையாட்டுக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் நடவடிக்கைக்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பாடசாலைகளிலும் விளையாட்டுக் கழகங்களிலும் மேசைப் பந்து, டென்னிஸ், பூப்பந்து, வலைப்பந்து மற்றும் சதுரங்கம் போன்ற உள்ளக விளையாட்டுக்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கு இளைஞர் விவகார அமைச்சரால் முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி 170 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டுச் செலவில் குறித்த வசதிகளுடன் கூடிய யாழ்ப்பாண உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply