நெடுந்தீவுக்கான அரச படகு சேவையில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான அறிவிப்பை நெடுந்தீவு பிரதேச செயலாளர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி நெடுந்தீவுக்கான அரச படகுகளான வடதாரகை மற்றும் நெடுந்தாரகை ஆகியவற்றின் சேவை நேரத்தில் எதிர்வரும் நவம்பர்13ஆம் திகதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் தினசரி மாலை நேர படகு சேவை நெடுந்தீவில் இருந்து பி.ப. 3.00 மணிக்கு புறப்படும் எனவும், குறிகாட்டுவானில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் நெடுந்தீவில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்படும் படகு குறிகாட்டுவானில் இருந்து காலை 8.00 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குமுதினி படகு சேவையில் மாற்றமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
