சட்ட விரோதமான முறையில் இந்திய எல்லைக்குள் உட்பிரவேசித்த இலங்கை பிரஜை ஒருவரை மண்டபம் கடற்கரை பொலிஸார் இன்று (13) கைது செய்துள்ளனர்.
மன்னார் வங்காலை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதான சந்தேகநபர் படகு மூலம் சட்டவிரோதமான முறையில் இந்திய எல்லைக்குள் உட்பிரவேசித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அவரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
