பேருந்து தரிப்பிடத்தில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்- கிளிநொச்சியில் சம்பவம்!

A-9 பிரதான வீதியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆணையிறவு – தட்டுவன் கொட்டி பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் இன்றையதினம் காலை பேருந்து தரிப்பிடத்தில் உயிரிழந்து காணப்பட்டார்.

36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply