பதுளை, பல்லேவத்த பிரதேசத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் கந்தகெட்டிய பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராக இருப்பதுடன், ஹாபத்கமுவ மின்சார வேலி பாதுகாப்பு உதவி உத்தியோகத்தராகவும் கடமையாற்றும் அதிகாரி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, பொலிஸார் உளவாளி ஒருவரைப் பயன்படுத்தி மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கைதான நபரிடம் இருந்து விற்பனைக்காகத் தயார் செய்யப்பட்டிருந்த 86 கிராம் கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
கைதான நபர் இன்று பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
