கொலை செய்ய முற்பட்டவர் கைது!

வெலிகம பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் உரிமையாளரைக் கொலை செய்யும் நோக்குடன் பிரவேசித்த சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேல் மாகாணம் வடக்கு குற்றப்பிரிவுப் பணிப்பாளரின் தலைமையிலான குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரிடமிருந்து T-56 ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அத்துடன் அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைதான சந்தேகநபர் தொடர்பில் மேல் மாகாணம் வடக்கு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply