யாழில் குடும்பஸ்தர் அடித்துக் கொலை!

யாழ்ப்பாணம் அச்செழு பகுதியில் நான்கு பிள்ளைகளின் தந்தையான 56 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கள்ளுத்தவறணை ஒன்றில் வைத்து தாக்கப்பட்டதில் உயிரிழந்தார்.

நேற்று  மாலை, புன்னாலைக் கட்டுவனில் உள்ள கள்ளுத்தவறணை ஒன்றுக்கு அவர் கள்ளு அருந்தச் சென்றபோது, அங்கு கள்ளு அருந்திக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த குடும்பஸ்தர் முதலில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் 56 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை ஆவார்.

இச்சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply