யாழ்ப்பாணம் – அரியாலை மற்றும் நல்லூர் அரசடிப் பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்- அரியாலைப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடுவதாக குருநகர் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது.
கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 27 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபரிடம் இருந்து 2.5 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.
இதேவேளை நல்லூர் அரசடிப் பகுதியில் வைத்து ஹெரோயின் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
24 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதான நபரிடம் இருந்து 570 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.
கைதான சந்தேகநபர்கள் இருவரும் இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
